ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் 36வது மாணவர் மன்றத் தொடக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவை ப்ளூ யாண்டர் நிறுவனத்தின் வாடிக்கையாளர் வெற்றி மற்றும் க்ளவுட் செயல்பாடுகள் பிரிவின் துணைத்தலைவர் மகிமா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். மாணவர் மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சிக்குத் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முனைவர் கி.சித்ரா கலந்து கொண்டனர், மாணவர் மன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற பொறுப்பாளர்கள் தங்களது பொறுப்புகளை நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் நிறைவேற்ற உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து மாணவர் மன்ற நிர்வாகிகள் உரையாற்றினர். கலை நிகழ்ச்சிகளுடன் கல்லூரி அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.

Leave a Reply