கோவை மெடிக்கல் சென்டர் மற்றும் ஹாஸ்பிடல், 2250-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளைக் கொண்ட முன்னணி மருத்துவமனை ஆகும். மருத்துவத் துறையின் அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளை உடனுக் குடன் நேயாளிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துவிடும். இந்த மருத்துவமனையிலுள்ள குடல் மற்றும் கல்லீரல் சிகிச்சைக்கான சிறப்பு
மையம், அதிநவீன வசதி களைக் கொண்டுள்ளது. கல்லீரல் செயலிழப்புக்கான தனிப்பிரிவு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட் பம், அதிநவீன எண்டோஸ்கோபி பிரிவு இந்த மருத்துமனையில் உள்ளன. அனுபவம் வாய்ந்த குடல் நோய் நிபுணர்கள், கல்லீரல் மருத்துவ நிபுணர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் தீவிர சிகிச்சை நிபுணர்கள் அடங்கிய குழுவினர், நோயாளிகளுக்குக் குறைந்த செலவில் உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்கி வருகின்றனர்.
மருத்துவத் துறையில்
தொடர் கற்றலை ஊக்கு விக்கும் நோக்கத்தில், கல்லீரல் மற்றும் குடல் நோய்கள் குறித்த “கேஸ்ட்ரோ ஹெப்கான்” மருத்துவ கருத்தரங்கு கே.எம்.சி.ஹெச் அரங்கில் நடைபெற்றது.கருத்தரங்கில் கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையின் தலைவரும் மேலாண்மை இயக்குநருமான டாக்டர் நல்லா ஜி பழனிசாமி பேசுகையில், “உலகின் முன்னணி மருத்துவ நிபுணர்களை ஒன்றிணைப்பதன் மூலம், அறிவைப் பகிரப்படுகிறது. இந்த அறிவைக் கொண்டு, மக்களுக்கு அதிநவீன மருத்துவ சிகிச்சை மற்றும் நோயாளி நலன் சார்ந்த மருத்துவச் சேவைகளை வழங்க முடியும்’’ என்றார்.
நிர்வாக இயக்குநர் டாக்டர் அருண் பழனிசாமி தனது உரையில், ‘’ மருத்துவமனையின் வெற்றிக்குக் கூட்டுமுயற்சியும் புதிய கண்டுபிடிப்புகளுமே காரணம் .கேஸ்ட்ரோ ஹெப்கான் போன்ற கருத்தரங்கு மூலம் எங்களது மருத்துவக் குழுவினர் புதிய மருத்துவ முன்னேற்றங்களைத் தெரிந்துகொள்ள முடிகிறது, இது நோயாளிகளுக்குச் சிறந்த முறையில் சிகிச்சையளிக்க உதவுகிறது” என்று பேசினார்.
முதன்மை விருந்தினராகப் பத்மபூஷன் பேராசிரியர் கே.ஆர். பழனிசாமி பங்கேற்றர். இங்கிலாந்தைச் சேர்ந்த பேராசிரியர்கள் டேரியஸ் எம் மிர்சா, முகமது தௌஃபிக் சிங்கப்பூரைச் சேர்ந்த டாக்டர் எட்வர்ட் சியோங் சீ கியோங் ஆகியோர் பங்கேற்று பேசினர். கருத்தரங்கில் 250-கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் கல்லீரல் மற்றும் குடல் நோய் குறித்த கருத்தரங்கு



Leave a Reply