அதிகளவில் சீனி கொள்முதல்… உடன்குடி கருப்பட்டி வியாபாரிகள் சிக்கிய பின்னணி

Spread the love

பனை மரத்தில் இருந்து
கிடைக்கும் பதநீரை காய்ச்சி கருப்பட்டி தயாரிக்கின்
றனர். தூத்துக்குடி மாவட்
டம் உடன்குடி பகுதியில் தயாரிக்கப்படும் கருப்
பட்டிக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது. ரசாயனங்கள் கலக்காமல் தயாரிக்கப்படும் கருப்பட்டி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைத் தருவதோடு, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் போன்ற சத்துக்களின் மூலமாகவும் கருதப்படுகிறது. தென்மாவட்ட மக்களுக்கு கருப்பட்டி தயாரிப்பு முக்கிய தொழிலாகவும், வருவாய் ஆதாரமுமாவும் உள்ளது. பனை தொழிலாளர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பதநீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, கற்கண்டுக்கு மத்திய அரசு ஜி.எஸ்.டி. விலக்கு இருந்தாலும், சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்றால் 5 சதவிகித ஜி.எஸ்.டி வரி உண்டு.
ஆனால் பதநீரில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக சீனி கலந்து கருப்பட்டி, கற்கண்டு போன்றவை தயாரித்தால், அவற்றுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. தமிழகத்திலேயே உடன்குடி பகுதியில்தான் சீனி மூட்டைகளை வியாபாரிகள் அதிகளவில் கொள்முதல் செய்ததாக நெல்லை மாவட்ட ஜி.எஸ்.டி. அதிகாரிகளுக்குதகவல் கிடைத்தது. உடன்குடி பகுதியில் கடந்த சில வாரங்களில் ரூ.5 கோடிக்கு சீனி மூட்டைகளை வியாபாரிகள் கொள்முதல் செய்துள்ளனர்.
அதோடு, பதநீரில் சீனி கலந்து கருப்பட்டி தயாரித்து, அதனை அசல் கருப்பட்டி என்று கூறி ரூ.6 கோடி வரை விற்றதும் கண்டுபிடிக்கப்பட்டது. அசல் கருப் பட்டி என்று கூறி சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்றதால் 5 சதவீத ஜி.எஸ்.டி. வரி மட்டுமே விதிக்கப்பட்டது.
அதேவேளையில், பதநீரில் 60 முதல் 70 சதவீதம் வரையி
லும் சீனி கலந்து கருப்பட்டி தயாரித்து விற்றுள்ளனர். சீனி கலந்து தயாரிக்கப்பட்ட கருப்பட்டிக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்படா
மல், 5 சதவீத வரி மட்டுமே விதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 6 ஆண்டுகளில் கருப்பட்டி வியாபாரிகள் சிலர் பல்வேறு முறை கேடுகள் செய்தது கண்டறியப்பட்டன. இதுதொடர்பாக உடன்குடி பகுதியைச் சேர்ந்த 5 கருப்பட்டி வியாபாரிகள் சிக்கினர். அவர்களுக்கு மொத்தம் ரூ.38 கோடி அபராதம் விதிக்கப்பட்டது.