தாராபுரம் சர்ச் சாலையில் மகாத்மா காந்தியின் 157-வது பிறந்த நாள் விழாவும், பெருந்தலைவர் காமராஜரின் 51-வது நினைவு நாளும் இன்று அனுசரிக்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமார் கலந்துகொண்டு, மகாத்மா காந்தியின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்தும், பெருந்தலைவர் காமராஜரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவியும் மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்டத் தலைவர் தென்னரசு, நகரச் செயலாளர் செந்தில், கோவை பரமசிவம், முன்னாள் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ரங்கராஜ், இளைஞரணித் தலைவர் ராகுல், டாக்டர் அழகு ஜெயபாலன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதி விசித்திரமங்கலம் மண்டலப் பொறுப்பாளருமான நிர்வாகிகள், மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.



Leave a Reply