மதுராந்தகம் இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், முதல்வர் விஜய் இன்று 45 கிலோமீட்டர் தொலைவிற்கு மாபெரும் ‘ரோடு ஷோ’ பிரசாரத்தில் களமிறங்குகிறார்.
மதியம் 2.30 மணிக்கு மாமண்டூரில் தொடங்கும் இந்த பிரமாண்ட வாகனப் பேரணி, புக்கத்துறை, படாளம், கருங்குழி, மேல்மருவத்தூர் வழியாக மாம்பாக்கம் வரை சென்று நிறைவடைகிறது.
வழிநெடுகிலும் 39 முக்கிய சந்திப்புகளில் தனது வாகனத்தை நிறுத்தி ‘விசில்’ சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் விஜய்யின் வருகைக்காக, 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, கூட்ட நெரிசலைக் தவிர்க்கும் பொருட்டு கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்த ரோடு ஷோவில் நேரில் கலந்துகொள்வதைத் தவிர்த்து நேரலையில் காணுமாறு த.வெ.க சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.



Leave a Reply