, ,

தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் வெளியீடு!

Spread the love
தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டிற்கான 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணையைச் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்.
இதன்படி, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 3ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அதேபோல், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 17ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ஆம் தேதி வரை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதிகளையும் அமைச்சர் முன்கூட்டியே அறிவித்துள்ளார். அதன்படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 7ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 20ஆம் தேதியும் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் நெருங்கி வருவதால் மாணவர்கள் தீவிர தயாரிப்புகளில் ஈடுபடுமாறு கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.