,

காஷ்மீரிலேயே அனுமதிக்கும் போது தமிழ்நாட்டில் அனுமதி மறுப்பது ஏன்? – காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Spread the love

தமிழ்நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சார்பில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரி, அதன் மாநிலச் செயலாளர் ஜெகதீசன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “தீவிரவாத அச்சுறுத்தல்களும் பாதுகாப்புச் சவால்களும் நிறைந்த ஜம்மு – காஷ்மீரிலேயே ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படுகிறதே! அப்படியிருக்க, அமைதிப் பூங்கா என்று வர்ணிக்கப்படும் தமிழ்நாட்டில் மட்டும் எதற்காகத் தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது?” என்று காவல்துறைக்குக் கடுமையான கேள்வி எழுப்பியது.

விசாரணையின் போது கருத்து தெரிவித்த உயர் நீதிமன்ற நீதிபதி, தமிழ்நாட்டில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்கப்படுவதே வாடிக்கையாக உள்ளதாகச் சுட்டிக்காட்டினார்.