தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் வரும் அக்டோபர் 16, 2026 அன்று காலை 11:00 மணிக்குக் கோயம்புத்தூர் விமான நிலையம் வந்தடைகிறார். அங்கு அவருக்கு முக்கியப் பிரமுகர்கள் புத்தகங்கள் வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். தொடர்ந்து, காலை 11:45 மணிக்கு விழா நடைபெறும் இடத்திற்குச் செல்லும் முதலமைச்சர், தந்தை பெரியார் அவர்களின் திருவுருவச்சிலையைத் திறந்து வைக்கிறார்.
அதனைத் தொடர்ந்து, காலை 11:50 மணிக்கு ‘பெரியார் அறிவுலகம்’ கல்வெட்டினை முதலமைச்சர் திறந்து வைக்கிறார். நண்பகல் 12:00 மணி முதல் 12:20 மணி வரை, பெரியார் அறிவுலகத்தின் பல்வேறு தளங்களில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பறை, அறிவியல் மையம், குழந்தைகளுக்கான நூலகம், புத்தகம் படிக்கும் பிரிவு மற்றும் டிஜிட்டல் நூலகம் உள்ளிட்ட பகுதிகளை அவர் நேரில் பார்வையிடுகிறார்.
மதிய நிகழ்ச்சியாக, மதியம் 12:20 மணிக்கு விழா மேடைக்கு வருகை தரும் முதலமைச்சருக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வரவேற்புரையாற்றுகிறார். பின்னர், முடிவுற்ற முடிவுற்ற திட்டப்பணிகளைத் திறந்து வைத்து, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும், மேடையில் 100 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். மாவட்ட ஆட்சியரின் நன்றியுரை மற்றும் நாட்டுப்பண்ணுடன் விழா நிறைவடைந்ததும், முதலமைச்சர் கோவை விமான நிலையத்திற்குப் புறப்பட்டுச் செல்கிறார்.



Leave a Reply