பாதாளச் சாக்கடை பராமரிப்பு தனியார் மயமாக்கம்: அரசின் முடிவுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு!

Spread the love
மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் பாதாளச் சாக்கடை திட்டங்களைப் பராமரிக்கும் பொறுப்பை அரசு-தனியார் பங்களிப்பு (PPP) முறையில் தனியாரிடம் ஒப்படைக்கத் தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்ட அறிக்கையில், பொதுச் சுகாதாரச் சேவைகளை லாப நோக்கம் கொண்ட கார்ப்பரேட் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும், இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குக் கழிவுநீர்க் கட்டணங்கள் உயர்ந்து கடும் நிதிச்சுமை ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.
மேலும், தூய்மைப் பணியாளர்கள் சுரண்டப்படும் அபாயம் இருப்பதால், அரசு உடனடியாக இந்த முடிவைக் கைவிட்டு டெண்டரைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.