மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழை காரணமாக, கோவை குற்றாலம் அருவியில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாகப் பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கருத்திற் கொண்டு, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா மையம் இன்று (21/09/2026) தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நீர்வரத்து சீராகி இயல்பு நிலை திரும்பும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவிப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் எனவும், வனத்துறையின் அடுத்தகட்ட அறிவிப்பு வரும் வரை ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.



Leave a Reply