கோவையில் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களைக் கடத்திச் சென்ற அதிவேக காரை, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் சுமார் 40 கிலோமீட்டர் தூரம் துணிச்சலுடன் விரட்டிச் சென்று பிடித்த கோவில்பாளையம் காவல் நிலைய தலைமை காவலர் வேல்முருகனின் கடமை உணர்வைப் பாராட்டி, தமிழக முதல்வர் அவரை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி மனதார வாழ்த்து தெரிவித்துள்ளார்.

குட்கா கடத்தலில் ஈடுபட்ட ஆபத்தான குற்றவாளிகளைக் கையும் களவுமாகப் பிடித்துக் சட்டத்தின் முன் நிறுத்திய தலைமை காவலர் வேல்முருகனின் இந்த வீரச் செயலும் அர்ப்பணிப்பும் காவல்துறைக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த சமூகத்திற்கும் பெரும் பெருமை சேர்த்துள்ளதாகத் தெரிவித்த முதல்வர், அவருக்கு உரிய சிறப்பு அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்க உறுதியளித்துள்ளார்.




Leave a Reply