மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் சமீபத்தில் குடமுழுக்கு விழா வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் செப்டம்பர் 28-ஆம் தேதி மதுரைக்கு வருகை தந்து மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் மாவட்டப் பயணத்தின் ஒரு பகுதியாக மதுரை செல்லும் முதல்வர், வரலாற்றுச் சிறப்புமிக்க இக்கோவிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பாதுகாப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன.



Leave a Reply