,

வரும் ஞாயிற்றுக்கிழமை (செப். 27) வங்கிகள் இயங்கும்! நிதியமைச்சகம் வெளியிட்ட அவசர அறிவிப்பு!

Spread the love

வங்கி ஊழியர்களின் கூட்டமைப்பான UFBU, வாரத்திற்கு 5 நாட்கள் வேலை முறை மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 28 முதல் 30 வரை 3 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது. முன்னதாக செப்டம்பர் 26 மற்றும் 27 சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால், தொடர்ந்து 5 நாட்கள் வங்கிச் சேவைகள் முடங்கும் சூழல் உருவானது. மேலும் செப்டம்பர் 30 அரையாண்டு கணக்கு முடிக்கும் நாள் என்பதால், நிதிப் பரிவர்த்தனைகள் கடுமையாகப் பாதிக்கப்படும் அபாயம் எழுந்தது.

பொதுமக்களின் சிரமத்தைக் தவிர்க்கும் வகையில், வரும் செப்டம்பர் 27 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்துப் பொதுத்துறை மற்றும் மண்டல கிராமப்புற வங்கிக் கிளைகள், ஏடிஎம் சார்ந்த பிரிவுகள் வழக்கம்போல் இயங்கும் என மத்திய நிதியமைச்சகம் மற்றும் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளன. எனவே, வாடிக்கையாளர்கள் தங்களது நேரிடி வங்கிப் பணிகளை ஞாயிற்றுக்கிழமையிலேயே முடித்துக் கொள்ளுமாறும், வேலைநிறுத்த நாட்களில் யுபிஐ (UPI), நெட் பேங்கிங் போன்ற டிஜிட்டல் சேவைகளைப் பயன்படுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.