,

பாஜகவில் வானதி சீனிவாசனுக்கு புதிய பொறுப்பு! 

Spread the love

கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன், பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்கு ஆந்திர மாநில பாஜகவின் இணைப் பொறுப்பாளர் (Co-Incharge) பதவி வழங்கப்பட்டுள்ளது.

பாஜக தேசியத் தலைமை வெளியிட்டுள்ள புதிய நிர்வாகிகள் நியமன அறிவிப்பில் இந்த முக்கிய முடிவு தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலமான ஆந்திராவில் பாஜகவின் அமைப்பை வலுப்படுத்தவும், கட்சிப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் இவருக்கு இந்தப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.