முன்னணி பால் விற்பனை நிறுவனங்களான அமுல் (Amul) மற்றும் மதர் டெய்ரி (Mother Dairy) ஆகியவை பால் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தியுள்ளன. இந்தப் புதிய விலை உயர்வு இன்று (நவம்பர் 12) முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
-
விலை உயர்வு விவரம்: அமுல் தாஜா (டோன்ட் மில்க்) லிட்டருக்கு ரூ.2-ம், அமுல் கோல்டு (ஃபுல் கிரீம்) லிட்டருக்கு ரூ.4-ம் உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் மதர் டெய்ரி பால் வகைகளும் லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை அதிகரித்துள்ளன.
-
காரணம் என்ன? கால்நடை தீவனங்களின் விலை உயர்வு, போக்குவரத்து மற்றும் பேக்கிங் செலவுகள் அதிகரித்திருப்பதே இந்த விலை உயர்வுக்குக் காரணம் என அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே காய்கறி மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலையால் தவித்து வரும் நடுத்தர வர்க்கத்தினருக்கு, இந்தப் பால் விலை உயர்வு கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply