கோவை கங்கா மருத்துவமனையின் இணை நிறுவனரும், நிர்வாக இயக்குநருமான கனகவள்ளி சண்முகநாதன் (89) வயது முதிர்வு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு மருத்துவத்துறையினர், பொதுமக்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இறுதிச்சடங்கு நவம்பர் 22-ஆம் தேதி காலை 10 மணிக்கு கோவை ஜிகேடி மயானத்தில் நடைபெறுகிறது.
1937-ஆம் ஆண்டு சேலம் அருகே உள்ள மகுடஞ்சாவடியில் பிறந்த கனகவள்ளி சண்முகநாதன், தனது கணவர் டாக்டர் ஜே.ஜி. சண்முகநாதனுடன் இணைந்து கங்கா மருத்துவமனையை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார்.
1978-ஆம் ஆண்டு கோவை ராமநகரில் 17 படுக்கைகள், 2 அறுவைச் சிகிச்சை அரங்குகளுடன் தொடங்கப்பட்ட கங்கா மருத்துவமனை, இவரது தொடர் பங்களிப்பால் படிப்படியாக வளர்ச்சியடைந்தது. தற்போது 650 படுக்கைகள், 38 அறுவைச் சிகிச்சை அரங்குகளுடன் தெற் காசியாவின் முக்கிய சிறப்பு மருத்துவமனைகளில் ஒன்றாகத் திகழ்கிறது.
மருத்துவமனையின் மற்றொரு நிறுவனரான டாக்டர் ஜே.ஜி. சண்முகநாதன் 2023-ஆம் ஆண்டு தனது 99-ஆவது வயதில் காலமானார். தற்போது கனகவள்ளி சண்முகநாதனும் மறைந்துள்ளதால், கங்கா மருத்துவமனையை உருவாக்கிய நிறுவனர்கள் இருவரும் மறைந்துள்ளனர். அவரது மறைவு கோவை மருத்துவத் துறையி னரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கங்கா மருத்துவமனை இணை நிறுவனர் கனகவள்ளி சண்முகநாதன் காலமானார்!



Leave a Reply