தொண்டாமுத்தூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்: எஸ்.பி. வேலுமணி ஆய்வு

Spread the love

 

கோவை: தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கான சிறப்பு முகாமை, முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.பி. வேலுமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளுக்காக இந்தச் சிறப்பு முகாம் நடைபெற்றது.

இதையடுத்து, முகாமில் பணியாற்றிய தேர்தல் அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் (BLO), புதிய வாக்காளர்களின் விண்ணப்பப் பதிவுகள், பொதுமக்களின் வருகை மற்றும் முகாமின் செயல்பாடுகள் குறித்து எஸ்.பி. வேலுமணி கேட்டறிந்தார். மேலும், விண்ணப்பிக்க வந்த பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்ததுடன், பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களைப் பாராட்டினார்.

இந்த ஆய்வின்போது, அதிமுக நிர்வாகிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் உடனிருந்தனர்.