கோவையில் காந்தி ஜெயந்தி மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி!

Spread the love

கோவை காமராஜ் மக்கள் இயக்கத்தின் சார்பில், காந்தி ஜெயந்தி மற்றும் கர்மவீரர் காமராஜரின் நினைவு நாளை முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

பேரூர் காஞ்சிமா நதிக்கரையில் தலைவர்களின் திருவுருவப் படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, தலைவர்களின் நினைவாக வைக்கப்பட்டிருந்த அஸ்திக் கலசத்திற்கும் மலரஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும், லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் நினைவாகவும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அன்பரசன் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

இதில் காமராஜ் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு, தேசத் தலைவர்களின் கொள்கைகள், தியாகங்கள் மற்றும் மக்கள் சேவையை நினைவுகூர்ந்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயக்கத்தின் மாநிலத் தலைவர் பேரூர் நாகராஜ் செய்திருந்தார்.