தமிழ்நாட்டில் பெண்களின் பயணச் செலவைக் குறைத்து அவர்களின் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரச் சுதந்திரத்தை உறுதி செய்யும் நோக்கில், கட்டணமில்லாப் பேருந்து சேவைத் திட்டம் மேலும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.
வருகிற அக்டோபர் 2-ஆம் தேதி (காந்தி ஜெயந்தி) அன்று ‘வெற்றிப் பயணம்’ என்ற புதிய பெயரில் இத்திட்டத்தை முதல்வர் விஜய் முறைப்படி தொடங்கி வைக்கவுள்ளார்.
திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
-
எந்தென்ன பேருந்துகளுக்குப் பொருந்தும்?: இதுவரை சாதாரண நகர்ப்புறப் பேருந்துகளில் மட்டுமே வழங்கப்பட்டு வந்த இலவசப் பயண வசதி, இனி மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் இயங்கும் எக்ஸ்பிரஸ் (Express), எல்.எஸ்.எஸ் (LSS), டீலக்ஸ் (Deluxe) பேருந்துகளுக்கும், புறநகர் சாதாரணப் பேருந்துகள் (Mofussil Ordinary) மற்றும் 40 கி.மீ-க்கு மேற்பட்ட மலைப்பாதைச் சாதாரணப் பேருந்துகளுக்கும் விரிவாக்கப் படுகிறது.
-
பயன்பெறும் பேருந்துகள்: அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் மொத்தப் பேருந்துகளில் 69% பேருந்துகள் (12,692 பேருந்துகள்) இத்திட்டத்தின் கீழ் இயக்கப்படும்.
-
பயனாளிகள்: தினமும் சுமார் 84.32 லட்சம் பெண்கள் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தயாரிப்புப் பணிகள்: இதற்கான மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்கள் (ETM) இணைப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், செப்டம்பர் 25-க்குள் சரிபார்ப்புப் பணிகளும், செப்டம்பர் 27-ல் சோதனை ஓட்டமும் (Trial run) நடைபெறவுள்ளன.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டு இத்திட்டத்தின் இறுதிப் பணிகளை ஆய்வு செய்தனர்.



Leave a Reply