தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கீழ் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் சந்திக்கும் சிரமங்களைத் தவிர்க்கவும், வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யவும் தமிழக அரசு முக்கிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.
விவசாயிகள் தங்களின் புகார்களை நேரடியாகவும் எளிதாகவும் தெரிவிக்கும் வகையில் “உழவர் உதவி மையம்” உருவாக்கப்பட்டு, அதன் பிரத்யேக வாட்ஸ்அப் புகார் எண் (9500801465) அறிவிக்கப்பட்டுள்ளது.
நேரடிக் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதில் தாமதம், இடைத்தரகர்களின் இடையூறு அல்லது முறைகேடுகள் ஏதேனும் இருந்தால், விவசாயிகள் உடனடியாக இந்த வாட்ஸ்அப் எண்ணிற்குத் தகவல் அனுப்பலாம்.



Leave a Reply