வேடபட்டியில் ‘இன்ஃபினியம் ஒன்லைஃப்’ பிரீமியம் ஓய்வுக்கால வாழ்க்கை சமூகக் குடியிருப்பு தொடக்கம்

Spread the love

இன்ஃபினியம் ஒன்லைஃப், ஓய்வு காலத்தை சுதந்திரமான மற்றும் திருப்திகரமான வாழ்க்கையாக மறுவரையறை செய்கிறது.
கோவை வேடப்பட்டியில் அமைதியான சூழலில் அமைந்துள்ள இந்த குடியிருப்பு, நடைபாதை, உடற்பயிற்சிக் கூடம், வெப்பமூட்டப்பட்ட நீச்சல் குளம், கிளப்ஹவுஸ், யோகா தளம், மினி தியேட்டர், நூலகம், சிகிச்சை தோட்டம், அக்குபிரஷர் பாதை மற்றும் தனித்துவமான ‘ஹார்வெஸ்ட் சர்க்கிள்’ ஆகிய வாழ்வியல் வசதி களுடன் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட 2 மற்றும் 3 படுக்கை அறைகள் கொண்ட ஓய்வு கால இல்லங்களை வழங்குகிறது.
மேலும், இந்த குடியிருப்பில் சலூன் மற்றும் ஸ்பா, பிசியோதெரபி, யோகா, மருத்துவ முகாம்கள், சமூக செயல்பாடுகள் மற்றும் குடியிருப்பா ளர்கள் தங்களுக்குள்
கற்பிக்கவும், வழிகாட்டவும், தங்களது ஆர்வங்களை வளர்த்துக் கொள்ளவும் ஊக்குவிக்கும் ‘த்ரைவ் ஹைவ்’ என்ற சிறப்பான முன்முயற்சியும் இடம் பெற்றுள்ளது.
ஓய்வு பெற்றவர்களின் தேவைகளை நுணுக்கமாகப் புரிந்து கொண்டு, அவர்களது விருப்பத்திற்கேற்ப தயாரிக்கப்பட்ட சைவ உணவு, வீட்டுப் பராமரிப்பு, பொதுப் பராமரிப்பு, விருந்தினர் சேவை மற்றும் சலவை செய்தல் உள்ளிட்ட சேவைகளுடன், 24 மணி நேர செவிலியர் சேவை, மருத்துவர்கள் வருகை மற்றும் முன்னணி மருத்துவமனை களுடனான ஒப்பந்தங் களையும் ஒருங்கிணைத்து வழங்குகிறது ஒன்லைஃப் குடியிருப்பு.
தடைகளற்ற அணுகல் அகலமான தாழ்வாரங்கள், பிடிமான கம்பிகள், மோஷன்-சென்சார் விளக்குகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கண்காணிப்பு போன்ற அம்சங்கள், குடியிருப்பாளர்கள் முழு நம்பிக்கையுடனும் சுதந்திர மாகவும் வாழ்வதற்கான பாதுகாப்பான சூழலை உருவாக்குகின்றன.
15 ஆண்டுகளுக்கும் மேலான ரியல் எஸ்டேட் நிபுணத்துவப் பின்னணியுடனும், 1,000-க்கும் மேற்பட்ட வீடுகளை வழங்கிய பாரம்பரியத்துடனும், ஹவுஸ் ஆஃப் இன்ஃபினியம் நிறுவனம் ‘ஒன்லைஃப் திட்டத்தை உருவாக்கி யுள்ளது. இது ஒரு ஓய்வு கால வாழ்க்கை முறைக்கான குடியிருப்பாகும். இங்கு ஒவ்வொரு வீடும் சுதந்திரமான வாழ்க்கையை நோக்கமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. மாடல் அபார்ட்மென்ட் தயார் நிலையில் உள்ளது. மேலும் விபரங்கள் மற்றும் முன்பதிவிற்கு: 9787022245. www.onelifehomes.com