தீபாவளிக்கு மறுநாள் நவம்பர் 9-ஆம் தேதி தமிழகத்தில் உள்ளூர் விடுமுறை!

Spread the love

தமிழகத்தில் தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாளான நவம்பர் 9-ஆம் தேதி, திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், நவம்பர் 28-ஆம் தேதி சனிக்கிழமை பணிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளிட்ட தொடர்புடைய நிறுவனங்கள் அன்றைய தினம் வழக்கம்போல் செயல்படும்.

மேலும், விடுமுறை நாளில் அவசரப் பணிகள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக, மாவட்டக் கருவூலங்கள் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.