அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் (அஇபுதமமுக) பொதுச் செயலாளர் சசிகலா, கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் சக்கரவர்த்தி அறிவித்துள்ளார். தேர்தல் முடிந்த பிறகு கட்சிப் பணிகளில் சசிகலா ஈடுபடவில்லை என்றும், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சக்கரவர்த்தி, தேர்தல் நேரத்தில் சசிகலா தங்களைக் கட்சியின் அரசியல் நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொண்டதாகத் தெரிவித்தார். மேலும், தேர்தலுக்குப் பிறகு கட்சியின் செயல்பாடுகளில் அவர் பங்கேற்கவில்லை என்றும், கட்சித் தொண்டர்கள் மற்றும் வேட்பாளர்களைச் சந்திக்கவில்லை என்றும் கூறினார்.
இதன் காரணமாக, கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தி, சசிகலாவைக் கட்சியில் இருந்து நீக்க முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதன்படி, பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் சசிகலா நீக்கப்படுவதாகக் கூறிய அவர், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு 2027 பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார்.



Leave a Reply