கோவை மாவட்டம் முழுவதும் பொது இடங்களில் 2,380 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட காவல் துறை அனுமதி வழங்கியுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, காவல் துறை உயர் அதிகாரிகள், அரசியல் கட்சியினர், ஹிந்து மற்றும் பிற அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதில் விழாவை அமைதியாக நடத்துவது தொடர்பாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
கோவை மாநகரப் பகுதிகளில் 780 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சிலை ஊர்வலங்கள் காவல் துறை அனுமதித்த வழித்தடங்களில் மட்டுமே நடைபெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் ரெட்டி கூறுகையில், புறநகர்ப் பகுதிகளில் 1,600 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றார்.
பொள்ளாச்சி, வால்பாறை, பெரியநாயக்கன ்பாளையம், பேரூர், கருமத்தம்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய 6 உள்கோட்டங்களிலும் காவல் அதிகாரிகள் ஒருங்கிணைந்து பாதுகாப்பு மற்றும் விழா ஏற்பாடுகளை கண்காணித்து வருகின்றனர். சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படாத வகையில் அனைத்து பகுதிகளிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் 2,380 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டைக்கு காவல்துறை அனுமதி



Leave a Reply