கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்குவதை யொட்டி, ‘பிரகதி ’26’ தொடக்க விழா நடைபெற்றது.
முதற்கட்டமாக செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல், கணினி அறிவியல் மற்றும் பொறியியல், கணினி அறிவியல் மற்றும் வணிக அமைப்புகள், சைபர் பாதுகாப்பு, இயந்திரப் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஆறு துறைகளைச் சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்பட்டன.
கேபிஆர் குழுமத் தலைவர் முனைவர் கே.பி. ராமசாமி தலைமையில் நடைபெற்ற விழாவில், கல்லூரி முதல்வர் அகிலா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார்.
இயற்கை மற்றும் மறுஉற்பத்தி விவசாயி வி.டி. வள்ளுவன், சிர்கோர் புளோ டெக்னாலஜிஸ் இந்தியா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் எஸ். ஆறுமுகம், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் கே. சுமதி, அர்பன் பிளேவர்ஸ் புட்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி முனிராஜ் கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
புதிய மாணவர்கள் கல்லூரியின் உயர்கல்விச் சூழலை அறிந்து கொள்வதுடன், தொழில்நுட்ப வளர்ச்சி, திறன் மேம்பாடு, தொழில் வாய்ப்புகள் மற்றும் எதிர்கால முன்னேற்றத்திற்குத் தேவையான வழிகாட்டுதல்களைப் பெறும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மாணவர்களுக்கான அறிமுக மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கேபிஆர் பொறியியல் கல்லூரியில் ‘பிரகதி ’26’ தொடக்க விழா



Leave a Reply