கோவை சரவணம்பட்டியில் மாநகரில் புதிய நவீன கண் மருத்துவமனையைத் துவக்கியது டாக்டர் அகர்வால்ஸ் குழுமம்

Spread the love

இந்தியாவின் மிகப்பெரிய, நம்பகமான கண் மருத்துவமனை குழுமங்களில் ஒன்றான டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, கோயம்புத்தூர், சரவணம்பட்டியில் தனது புதிய அதிநவீன கண் மருத்துவமனையைத் திறந்துள்ளது. அதிநவீன கண் மருத்துவச் சேவைகளை அனைவரும் எளிதில் பெறுவதை உறுதி செய்யும் இலக்கோடு செயல்படும் இக்குழுமத்தின் பயணத்தில், மேற்கு தமிழ்நாடு பிராந்தியத்தில் தொடங்கப்பட்டிருக்கும் இம்மருத்துவமனை, ஒரு முக்கிய மைல்கல் நிகழ்வாகும். இது, டாக்டர். அகர்வால்ஸ் குழுமம் தமிழ்நாட்டில் தொடங்கியிருக்கும் 89-வது மருத்துவமனையாகும்.

சிகிச்சை பெறுவோரின் நலனை மையப்படுத்திய சூழலில், முழுமையான கண் மருத்துவச் சேவைகளை வழங்கும் வகையில் இந்த மருத்துவமனை வடிவமைக்கப்பட்டுள்ளது. அமைதியான சூழலுடன், மேம்பட்ட மாடுலர் அறுவைசிகிச்சை அரங்குகள், அதிநவீன நோயறிதல் கருவிகள் மற்றும் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்ட கண்ணாடியகம் (ஆப்டிகல்) மற்றும் மருந்தகப் பிரிவு ஆகியவற்றுடன் இது செயல்படுகிறது. இந்த மருத்துவமனையின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்று இதன் ‘வியூவிங் கேலரி’ ஆகும். இது நோயாளிகள் மற்றும் அவர்களுடன் வருபவர்களுக்கு சிகிச்சை செயல்முறையின் ஒவ்வொரு கட்டத்திலும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இம்மருத்துவமனையின் மருத்துவக் குழுவை, மருத்துவச் சேவைகளுக்கான மண்டலத் தலைவர் டாக்டர் கற்பகவள்ளி வழிநடத்துவார். கண்புரை, கண்அழுத்த நோய், விழித்திரை, கருவிழி, ஒளிவிலகல் மற்றும் விழியில் ஒட்டறுவை சிகிச்சை ஆகிய பல்வேறு பிரிவுகளில் உயர் சிகிச்சை வழங்கும் அனுபவம் வாய்ந்த நிபுணர்கள் இங்கு பணியாற்றுகின்றனர்.

திறப்பு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கண்களில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை பெறுவதை ஊக்குவிக்கும் வகையில், 2026 செப்டம்பர் 30 வரை இலவச கண் பரிசோதனை மற்றும் மருத்துவ ஆலோசனைகளை இம்மருத்துவமனை வழங்குகிறது. கட்டணமின்றி இலவசமாக வழங்கப்படும் முழுமையான கண் பரிசோதனைக்கு முன்பதிவு செய்ய, நோயாளிகள் 9594901452 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

இந்த மருத்துவமனையை, எஸ்என்ஆர் சன்ஸ் சேரிட்டபிள் டிரஸ்ட் – ன் நிர்வாக அறங்காவலர் டாக்டர். சுந்தர் இராமகிருஷ்ணன் திறந்து வைத்தார். இந்நிகழ்வில் டாக்டர். E. கற்பகவள்ளி, மண்டல தலைவர் – மருத்துவ சேவைகள், டாக்டர். அகர்வால்ஸ் குழுமத்தின் செயல்பாட்டுப் பிரிவின் மூத்த துணைத் தலைவர்  நந்தகுமார் உள்ளிட்ட மருத்துவமனை நிர்வாகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.