மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு கே.ஜி. மருத்துவமனையில் இலவச இரத்த அழுத்த பரிசோதனை மையம் தொடக்கம்

Spread the love

தேசிய மருத்துவர்கள் தினம் 2026-ஐ முன்னிட்டு, நோய்களை வருமுன் தடுக்கும் சுகாதாரப் பராமரிப்பை ஊக்குவிக்கும் வகையில், கோவை கே.ஜி. மருத்துவ மனையில் இலவச இரத்த அழுத்த பரிசோதனை மையம் தொடங்கப்பட்டது.
மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி. பக்தவத்சலம் இந்த மையத்தை தொடங்கி வைத்தார்.
இந்த மையத்தின் மூலம் பொதுமக்களுக்கு இலவசமாக இரத்த அழுத்த பரிசோதனை மேற்கொள்ளப் படுவதுடன், உயர் இரத்த அழுத்தம் கண்டறியப் படுபவர்களுக்கு மருத்துவர் ஆலோசனை, ஆரோக்கியமான வாழ்க்கைமுறை வழிகாட்டுதல் மற்றும் தேவையெனில் மேலதிக மருத்துவ பரிசோதனைக்கான பரிந்துரைகளும் வழங்கப்படுகின்றன.


உயர் இரத்த அழுத்தம் அறிகுறிகள் இன்றி ஏற்பட்டு, மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக நோய் மற்றும் இதய செயலிழப்பு உள்ளிட்ட கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய “அமைதியான கொலையாளி” என்பதால், அனைவரும் தவறாமல் இரத்த அழுத்தத்தை பரிசோதித்துக் கொள்ள வேண்டியது அவசியம் என மருத்துவர்கள் வலியுறுத்தினர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக சமூக அடிப்படையிலான பரிசோதனை முகாம்கள் மூலம் 8.5 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு கே.ஜி. மருத்துவமனை இரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டு ள்ளதாகவும், இதன் மூலம் ஆயிரக்கணக்க ானோருக்கு ஆரம்ப நிலையிலேயே உயர் இரத்த அழுத்தம் கண்டறியப்பட்டு சிகிச்சை மற்றும் வாழ்க்கைமுறை ஆலோசனைகள் வழங்கப்பட்டு ள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய டாக்டர் ஜி. பக்தவத்சலம், “வருமுன் காப்பதே சிறந்த மருத்துவம். வழக்கமான இரத்த அழுத்த பரிசோதனை மூலம் நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உயிருக்கு ஆபத்தான சிக்கல்களைத் தடுக்க முடியும். அனைவருக்கும் முன்னெச்சரிக்கை மருத்துவ சேவையை எளிதாகக் கிடைக்கச் செய்வதே எங்களது நோக்கம்,” என்றார்.
விழிப்புணர்வு, ஆரம்பகால நோய் கண்டறிதல் மற்றும் முன்னெச்சரிக்கை மருத்துவ சேவைகள் மூலம் தொற்றாத நோய்களைக் கட்டுப்படுத்தும் சமூகப் பணியின் ஒரு பகுதியாக இந்த இலவச இரத்த அழுத்த பரிசோதனை மையம் செயல்படுவதாக கே.ஜி. மருத்துவமனை தெரிவித்துள்ளது.