தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, அசோசியேசன் ஆஃப் அலையன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் மாவட்டம் 250-S மற்றும் வி.ஜி.எம். அறக்கட்டளை இணைந்து, கோவையில் உள்ள வி.ஜி.எம். மருத்துவமனையில் தேசிய மருத்துவர்கள் தின விழாவை சிறப்பாக நடத்தின.
அலையன்ஸ் மாவட்ட ஆளுநர் ஜி. சுந்தரம் தலைமை வகித்த விழாவில், மாவட்ட சுகாதார இணை இயக்குநர் டாக்டர் வி. சுமதி, வி.ஜி.எம். அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் வி.ஜி. மோகன் பிரசாத் மற்றும் சர்வதேச அலையன்ஸ் சங்க இயக்குநர் என். ராஜன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டத்தில் மருத்துவத் துறையில் சிறப்பாகப் பணியாற்றி வரும் 14 மருத்துவர்களுக்கு, அவர்களின் அர்ப்பணி ப்புமிக்க சேவையைப் பாராட்டி வாழ்நாள் சாதனையாளர் விருது மற்றும் சிறந்த மருத்துவர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளைச் சேர்ந்த மருத்துவர்கள் இடம்பெற்றனர்.
விழாவில் அலையன்ஸ் சங்கத்தின் முன்னாள் மாவட்ட ஆளுநர்கள் குணசேகரன், விஜயகுமார், டி. ஸ்ரீனிவாசன், ராஜேஷ்குமார் ஆகியோர் மருத்துவர்களின் சேவையைப் பாராட்டி வாழ்த்துரை வழங்கினர்.
மேலும், கோவை இன்னர் வீல் கிளப் டிரஸ்ட் சார்பில் வி.ஜி.எம். மருத்துவமனையின் மருத்துவர்கள் கவுரவிக்கப்பட்டதுடன், சமூகப் பொறுப்புணர்வின் ஒரு பகுதியாக சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவரின் டயாலிசிஸ் சிகிச்சைக்காக நிதியுதவியும் வழங்கப்பட்டது. இதில் இன்னர் வீல் கிளப் டிரஸ்ட் தலைவர் வீணா சங்கர், செயலாளர் பார்வதி ரவி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு வி.ஜி.எம். மருத்துவமனையின் எலும்பு மற்றும் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சுமன் வரவேற்புரை ஆற்றினார். நிறைவில் அலையன்ஸ் மாவட்ட இரண்டாம் துணை ஆளுநர் எஸ். பிரபாகரன் நன்றியுரை வழங்கினார்.இந்நிகழ்வில் வி.ஜி.எம். மருத்துவமனை மருத்துவர்கள், அலையன்ஸ் சங்க நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தேசிய மருத்துவர்கள் தினத்தை கொண்டாடினர்.
தேசிய மருத்துவர்கள் தினம் – வி.ஜி.எம். மருத்துவமனையில் 14 மருத்துவர்களுக்கு விருது வழங்கி கவுரவிப்பு



Leave a Reply