கருமத்தம்பட்டியில் ஜம்கோ மளிகை மொத்த விற்பனை நிறுவனத்தை திறந்து வைத்தார் இராமானந்த குமரகுருபர சுவாமிகள்

Spread the love

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே புதியதாக தொடங்கப்பட்ட “ஜம்கோ மளிகை” மொத்த விற்பனை நிறுவனத்தின் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிறுவனத்தை சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர சுவாமிகள் திறந்து வைத்து ஆசி வழங்கினார். விழாவில் பொதுமக்கள், வணிகர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு புதிய நிறுவனத்தின் தொடக்கத்தை வரவேற்றனர்.
நிறுவனர்கள் மதன், செல்வம் முருகன் மற்றும் கார்த்திக் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பொதுமக்களுக்கு தரமான மளிகைப் பொருட்களை குறைந்த விலையில் வழங்கும் நோக்கில் நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், மொத்த மற்றும் சில்லறை விற்பனை முறையில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் மலிவு விலையில் கிடைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கூறினர்.
திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் அறிவிக்கப் பட்டுள்ளதுடன், கருமத்தம்பட்டி மற்றும் சுற்றுவட்டார மக்களிடையே இந்த புதிய விற்பனை நிலையம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தனர்.