​ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா

Spread the love
ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2026 – 2027 ஆம் கல்வியாண்டில் இளநிலை பட்டப் படிப்பில் சேர்ந்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா கல்லூரியின் கலையரங்கில் நடைபெற்றது.

விழாவிற்கு எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார் வரவேற்புரை வழங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தரும் ஈபிஜி ஃபவுண்டேஷனின் தலைவருமான முனைவர் ஈ.பாலகுருசாமி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவினைத் தொடங்கி வைத்தார். பின்னர், கல்லூரி கையேட்டினை சிறப்பு விருந்தினர் வெளியிட எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டாக்டர் சுந்தர் ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில் முன்னாள் மாணவரும், திருநெல்வேலி சையத் குழுமங்களின் இயக்குநருமான முனைவர் என். சையத் நவாஸ் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு தன் கல்லூரி கால அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டு உரையாற்றினார். தொடர்ந்து, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. நிறைவாக கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவர் முனைவர் ஜி.மரிய பிரிசில்லா நன்றி கூறினார்.