தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, இல்லத்தரசிகளின் சிரமத்தைக் குறைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் மிகக் குறைந்த விலையில் அத்தியாவசியக் காய்கறிகள் அடங்கிய ‘வெற்றி சிறப்பு காய்கறித் தொகுப்பு’ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணையைக் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது.
வரும் நவம்பர் 5-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை (நவ. 5 – 7) தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் சென்னையில் இயக்கப்பட உள்ள 4 நடமாடும் காய்கறி அங்காடிகள் மூலம் இந்தச் சிறப்பு விற்பனை நடைபெற உள்ளது.
காய்கறித் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருட்கள்:
-
பெரிய வெங்காயம் – 500 கிராம்
-
தக்காளி – 500 கிராம்
-
உருளைக்கிழங்கு – 250 கிராம்
-
கத்தரிக்காய் – 250 கிராம்
-
கேரட் – 200 கிராம்
-
பீன்ஸ் – 200 கிராம்
-
பச்சை மிளகாய் – 100 கிராம்
-
எலுமிச்சை – 100 கிராம்
-
இஞ்சி – 50 கிராம்
-
தேங்காய் – 1 (400 – 450 கிராம்)
பண்டிகைக் காலத்தில் காய்கறிகளின் விலை உயர்வைத் தடுத்து, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்குப் பலனளிக்கும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Leave a Reply