முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 103-வது பிறந்தநாள் விழா கோவை மாநகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, கோவை மாநகர் மாவட்டம் 80-வது வார்டுக்கு உட்பட்ட கெம்பட்டி மைதானம், அசோக் நகர் மற்றும் செட்டி வீதி பகுதிகளில் புதன்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில், கோவை மாநகராட்சி பொது சுகாதாரக் குழுத் தலைவர் பெ. மாரிச்செல்வன், கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் திமுக மாநில தீர்மானக் குழு இணைச் செயலாளர் பி. நாச்சிமுத்து, பகுதி பொறுப்பாளர் முருகேசன், வட்டக் செயலாளர் நா. தங்கவேலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், வை. இளங்கோ, கோபி ராஜேந்திரன், ஜெயபிரகாஷ், பாக்கியம், சந்துரு, வேங்கட கோபால், பத்மநாபன், ரவி, மனோஜ்குமார், யுவராஜ், சக்கரவர்த்தி, புவனேஸ்வரி, தீபா, இந்திரா காந்தி, கமலம், மகேஸ்வரி உள்ளிட்ட வட்டக் நிர்வாகிகள், புகழ் வணக்கம் செலுத்தினர்.
கலைஞரின் பிறந்தநாள் விழா – கெம்பட்டி காலனியில் திமுகவினர் மரியாதை



Leave a Reply