எல்.ராஜகோபால்
கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கம் சார்பில் இயந்திர மற்றும் பொறியியல் தொழில் கண்காட்சி (இன்டெக்-2026) கோவை அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா கண்காட்சி வளாகத்தில் ஜூன் 4-ம் தேதி தொடங்குகிறது.
வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் ‘இன்டெக் – 2026’ தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:
கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில் 21-வது சர்வதேச இன்டெக்-2026 கண்காட்சி வருகிற ஜூன் 4-ம் தேதி தொடங்கி ஜூன் 8-ம் தேதி வரை நடக்கிறது. இக்கண்காட்சியில் ஜெர்மனி, ஜப்பான், அமெரிக்கா, தைவான், சீனா மற்றும் கொரியா நாட்டின் உற்பத்தி பொருட்கள், இயந்திரங்கள் மற்றும் கருவிகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
650க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாடு, கோவா, குஜராத், கர்நாடகா உள்ளிட்ட 13 மாநிலங்களை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொள்கின்றனர்.
70 ஆயிரம் பேர் வரை பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கிறோம். சிறப்பு விருந்தினராக ஜப்பான் ஜிங்கி இட்டாய் லிட், நிறுவனர் டாக்டர் கனோகா, கவுரவ விருந்தினர்களாக சென்னை ஐசிஎப் பொது மேலாளர் சுப்பாராவ், மும்பை ஆர்.ஐ.ஆர் பவர் எலக்ட்ரானிக்ஸ் லிட்., நிர்வாக இயக்குனர் ரமேஷ்குமார் கலந்து கொள்கின்றனர். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கண்காட்சி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
‘கொடிசியா’ தொழில் அமைப்பின் தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.



Leave a Reply