ஏப்ரல் முதல் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் அறிமுகமா?

Spread the love

இந்தியாவில் முதற்கட்டமாக ரூ.10, ரூ.20 மதிப்பிலான பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான சோதனை ஓட்டம் 2027 ஏப்ரல் முதல் தொடங்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தலா 100 கோடி நோட்டுகள் வீதம் மொத்தம் 200 கோடி நோட்டுகள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

புதிய நோட்டுகள் தற்போதைய காகித நோட்டுகளின் அளவிலேயே இருக்கும். ஏடிஎம் இயந்திரங்களில் மாற்றம் செய்ய வேண்டிய அவசியத்தைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

காகித நோட்டுகளைவிட 2 முதல் 4 மடங்கு அதிக காலம் உழைக்கும் தன்மை கொண்ட இந்த நோட்டுகளில் கள்ளநோட்டுகளைத் தடுக்கும் பாதுகாப்பு அம்சங்களும் இடம்பெற உள்ளன. தற்போதைய காகித நோட்டுகளும் தொடர்ந்து புழக்கத்தில் இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *