முதலமைச்சர் கோப்பை 2026: மாநில அளவில் மூன்றாம் இடம் பிடித்து கோவை மாவட்டம் சாதனை!

Spread the love

தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை 2026 மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கோவை மாவட்டம் 27 தங்கம், 37 வெள்ளி, 54 வெண்கலம் என மொத்தம் 118 பதக்கங்களை வென்று மூன்றாம் இடத்தைப் பிடித்தது. இதற்கான கோப்பையை அக்டோபர் 29-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிறைவு விழாவில் முதலமைச்சர் ச. ஜோசப் விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவரிடம் வழங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் வீரர், வீராங்கனைகளும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.