கோவையில் ராஜீவ் காந்தி நினைவு நாள் மெழுகுவர்த்தி ஊர்வலம்​, அஞ்சலி 

Spread the love

கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் சார்பாக, மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் விஜயகுமார் அவர்கள் தலைமையில், முன்னாள் பிரதமர் அமரர் ராஜீவ் காந்தி​யின் 35வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக சென்று அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில், கோவை மாநகர் மாவட்டத்தின் பல்வேறு காங்கிரஸ் நிர்வாகிகள், இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். மாநில பொது குழு உறுப்பினர்கள் சௌந்தர் குமார், சுரேஷ், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சுதன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஃபெரோஸ், மாவட்ட நிர்வாகிகள் கருணாகரன், ராம நாகராஜ், பாஸ்கர், பாசமலர் சண்முகம், ராஜமாணிக்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், ஜனார்த்தனன், சௌந்தர்ராஜன், அசோக் குமார், தனபால், பார்த்திபன், சுரேந்திர பாபு, டென்னிஸ், செல்வராஜ், சிங்கை செல்வராஜ், ரஹ்மத்துல்லாஹ், ரமேஷ், பாலச்சந்தர், ரூபோட், ஆரோக்கிராஜ், சரவணகுமார், பறக்கும் படை ராஜ்குமார், மனோஜ் குமார், ஷபானா, ஸ்வேதா, ஹர்ஷத், அபீஷ், ஆசிப், செரிப், ருத்ர பிரகாஷ், ஆதித்யா, விக்னேஷ், சுரேந்திரன், சந்திரசேகர், காமராஜ், வின்சென்ட், அமல்ராஜ், ராமச்சந்திரன், கருடா பாலு, செல்வராஜ், தாரா, பீளமேடு கார்த்திக், குறிச்சி முகமது கனி, செந்தில், சுரேஷ் பிரகாஷ், பிரபு, கணேஷ் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *