கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு, தமிழக வெற்றிக் கழகம் வழக்கறிஞர் பிரிவு சார்பில் சிறப்பான கொண்டாட்ட நிகழ்வு நடைபெற்றது.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக ஒருவர் இன்று பொறுப்பேற்றதையொட்டி இந்த நிகழ்வு நடைபெற்றது. இதையடுத்து அமைச்சர்கள் அனைவரும் பதவியேற்றதை முன்னிட்டு கட்சி சார்பில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் கொண்டாட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்விற்கு மாநில இணை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அணி மனோஜ் குமார் தலைமை தாங்கினார். கோவை மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற இந்த நிகழ்வில் உற்சாகமான சூழல் நிலவியது. கட்சி நிர்வாகிகள் மற்றும் வழக்கறிஞர்கள் இணைந்து கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.



Leave a Reply