தமிழக அமைச்சரவையில் புதியதாக 23 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். சென்னை ராஜ்பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
விழா தொடக்கத்தில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டு பின்னர் தேசிய கீதம் மற்றும் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டது. இதே நடைமுறை முதலமைச்சர் பதவியேற்ற நிகழ்ச்சியிலும் பின்பற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த மே 9ஆம் தேதி முதலமைச்சராக விஜய் பதவியேற்றபோது, அவருடன் 9 அமைச்சர்கள் பதவியேற்றிருந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டு, மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்ந்துள்ளது.
பதவியேற்றவர்களில் தூத்துக்குடி எம்எல்ஏ ஸ்ரீநாத், அவிநாசி எம்எல்ஏ எஸ். கமலி, காஞ்சிபுரம் எம்எல்ஏ ஆர்.வி. ரஞ்சித் குமார், கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ சம்பத்குமார் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மற்றும் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
தமிழக அரசியலில் சுமார் 59 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது அரசியல் வட்டாரங்களில் முக்கிய திருப்புமுனையாக பார்க்கப்படுகிறது.



Leave a Reply