நெல்லை அருகே தமிழக வெற்றி கழகத் தொண்டர் தீக்குளிப்பு

Spread the love

விஜய் முதலமைச்சராவதில் தொடர்ச்சியாக தாமதம் ஏற்பட்டு வருவதால் மன உளைச்சலில் இருந்த தமிழக வெற்றிக்கழக நிர்வாகி ஒருவர் தீக்குளித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அருகேயுள்ள புதுமை கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன் (47). இவர் தமிழக வெற்றி கழகத்தின் கிளைக் கழக செயலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு, தனது கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக வேண்டி, சுமார் 16 அடி நீளம் கொண்ட வேலை அலகாகக் குத்திக் கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தியிருந்தார்.

இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வர் ஆக முடியாத சூழல் நிலவியதால் கடந்த 3 நாட்களாக மன உளைச்சலில் இருந்தார். இந்த நிலையில், இன்று மனமுடைந்த இசக்கியப்பன், திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளித்தார். இதில் பலத்த காயமடைந்த அவர், தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இசக்கியப்பனுக்கு 80 சதகிவித தீக்காயம் ஏற்பட்டுள்ளது.