கோவை செல்வபுரம் பகுதியில் 41 ஆம் ஆண்டு ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ஒவ்வொரு ஆண்டும் செல்வபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ எல்லை மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத திருவிழா வெகு விமர்சையாக நடைபெறும் அதன் படி இம்முறை 41வது ஆண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் எல்லை மாரியம்மன்க்கு சிறப்பு பூஜைகள் மேற்கொள்ளப்பட்டனர். அதன் ஒரு பகுதியாக கோவில் திருவிழாவை முன்னிட்டு மழை வேண்டியும் பொதுமக்களின் நலம் வேண்டியும் விளக்கு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஊர் பொதுமக்கள் பக்தர்கள் திரளானோர் பங்கேற்று விளக்கு பூஜை மேற்கொண்டனர்.
இந்த திருவிழாவையும் பூஜை நிகழ்வுகளையும் கோவில் கமிட்டியினர் ஒருங்கிணைத்தனர்.



Leave a Reply