கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் ஓரத்தில் உள்ள குட்டையில் காருடன் மூழ்கி வாலிபர் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இறந்த இளைஞர் யார் என்ற விபரம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் ஓரத்தில் உள்ள குட்டையில் கார் ஒன்று மூழ்கி கிடப்பதாக பெரியநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீயணைப்பு துறையினரின் உதவியுடன் காரை மீட்க முயற்சித்தனர். அப்போது காருக்கு நீரில் மூழ்கி சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளைஞர் உயிரிழந்து கிடப்பது தெரியவந்தது.

இதையடுத்து இளைஞரின் உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த இளைஞர் யார் என்ற விபரம் குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இரவில் வேகமாக வந்து வழி தெரியாமல் சாலை ஓரத்தில் இருந்த குட்டைக்குள் காருடன் பாய்ந்திருக்கலாம் என போலீசார் தெரிவிக்கின்றனர். காருடன் மூழ்கி வாலிபர் இறந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



Leave a Reply