சித்திரா பௌர்ணமி – தர்மலிங்கேஸ்வரர் ஆலயத்தில் எஸ்.பி. அன்பரசன் வழிபாடு

Spread the love

சித்திரா பௌர்ணமியை முன் னிட்டு கோவை மதுக்கரை அருகிலுள்ள அருள்மிகு தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரளாகக் கூடிச் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
மரப்பாலம் அருகே அமைந்துள்ள இந்தப் பழமையான மற்றும் சக்திவாய்ந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்திரா பௌர்ணமி நாளன்று கோவை மட்டுமல்லாது சுற்றுவட்டார மாவட்டங்களிலிருந்தும் பக்தர்கள் திரளாக வந்து சிவபெருமானை தரிசனம் செய்து கிரிவலம் செல்வது வழக்கமாகும்.
அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில் பக்தர்கள் “அரோகரா” கோஷம் எழுப்பி பக்தி பரவசத்துடன் மலைச்சுற்று கிரிவலம் மேற்கொண்டனர்.
இந்நிகழ்வில் நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ்.பி. அன்பரசன் கலந்து கொண்டு சிறப்பு சாமி தரிசனம் செய்தார். மேலும் ஆலயத்தில் நடைபெற்ற யாகத்தில் பங்கேற்று வழிபாடு மேற்கொண்டார்.


இதனைத் தொடர்ந்து, கோவிலுக்கு வந்த பக்தர்களுக்காக அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்து, பக்தர்களுக்கு உணவு வழங்கினார்.