கோவை ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரியின் 25வது முதலாம் ஆண்டு மாணவ மாணவியர் வரவேற்பு விழா கல்லூரி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
எஸ். என். ஆர் சன்ஸ் சாரிடபிள் டிரஸ்டின் நிர்வாக அறங்காவலர் முனைவர் சுந்தர் ராமகிருஷ்ணன் அவர்கள் தலைமையேற்று, தனது சிறப்புரையில் நமது கல்லூரியைத் தேர்வு செய்த மாணவ மாணவியர்கள் மற்றும் அவர்தம் பெற்றோர்களை வாழ்த்தி வரவேற்றார். மாணவர்கள் கல்லூரியின் சிறப்புத் திறன் மையங்கள்கள், ஆய்வகங்கள் மற்றும் நூலகம் உள்ளிட்ட மேம்பட்ட வசதிகளையும் கற்றல் வாய்ப்புகளையும் முழுமையாகப் பயன்படுத்தி, தங்களது திறன்களை மேம்படுத்தி, சிறந்த தொழில் வாழ்க்கையை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

சென்னை, Mahindra Research Valley-யின் Technology Innovation துணைத் தலைவர் முனைவர் சங்கர் வேணுகோபால் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார். பொறியியல் பட்டதாரிகளிடமிருந்து தொழில்துறை எதிர்பார்ப்பது என்ன என்பதை எடுத்துரைத்த அவர், நான்கு ஆண்டுகளில் கிடைக்கும் அனைத்து வாய்ப்புகளையும் மாணவர்கள் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மாணவர்கள் தங்களது முக்கியப் பொறியியல் துறையைத் தாண்டி, அதனுடன் தொடர்புடைய பிற பொறியியல் துறைகள் குறித்தும் அறிவைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். இன்றைய பல்துறை தொழில்நுட்பச் சூழலில், ஒரு மொபிலிட்டி இன்ஜினியர் பல்வேறு பொறியியல் துறைகள் குறித்த அடிப்படை அறிவைப் பெற்றிருக்க வேண்டும் என்றும், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
கௌரவ விருந்தினராக 2021-2025 ஆண்டில் பயின்ற முன்னாள் மாணவர் ஆர்.ரூபன்குமார், மென்பொருள் பொறியாளர்(பயன்பாட்டு மேம்பாடு), கவாசகி ரோபோட்டிக்ஸ், கோயம்புத்தூர் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.



Leave a Reply