,

நகைப் பிரியர்களுக்கு நிம்மதி! அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை!

Spread the love

சர்வதேச சந்தை மாற்றங்களின் காரணமாக இன்று அதிரடியாகக் குறைந்து நுகர்வோருக்கும் இல்லத்தரசிகளுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

இன்றைய வர்த்தக நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே அடியாக ரூ.1,800 குறைந்து, ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.225 சரிந்து ரூ.13,950 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி ஒரு கிராம் ரூ.250-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,50,000-க்கும் விற்பனையாகிறது.

வரவிருக்கும் சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் பண்டிகைக் காலத்தை ஒட்டி நகை வாங்கத் திட்டமிட்டிருப்பவர்களுக்கு இந்த திடீர் விலை குறைவு ஒரு சிறந்த வாய்ப்பாகப் பார்க்கப்பட்டாலும், வரும் நாட்களில் இந்த சரிவு தொடருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *