கேரள மாநிலத்தில் இருந்து 16 பேர் கொண்ட சுற்றுலா குழு வேனில் வால்பாறைக்கு வந்திருந்தனர். அவர்கள் இன்று வால்பாறையில் இருந்து பொள்ளாச்சி நோக்கி திரும்பிச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
போலீஸ் தரப்பில் கிடைத்த தகவலின்படி, வால்பாறை மலைச்சாலையின் 13-ஆவது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது வேன் கட்டுப்பாட்டை இழந்து முதலில் தடுப்புச் சுவரில் மோதி, பின்னர் சுமார் 800 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த கோர விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் காயமடைந்த நிலையில் மீட்புப் பணியாளர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பினர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினர். காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மலைச்சாலையில் வளைவை எடுக்கும்போது வேன் கட்டுப்பாட்டை இழந்ததா, அல்லது தொழில்நுட்ப கோளாறா என்பது குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது



Leave a Reply