தமிழ்நாடு வனத்துறை சார்பில் பசுமை நிலப்பரப்பை அதிகரிக்கும் நோக்கத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள், பள்ளி, கல்லூரி நிர்வாகத்
தினர் மற்றும் தொழில் துறையினருக்கு இலவச மாக வழங்க மரக்கன்றுகள் தயார் நிலையில் உள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தமிழ்நாடு வனத்துறை கோவை வனக்கோட்டம் சார்பில், கோவை வடகோவை பகுதியில் அமைந்துள்ள வன அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய நர்சரியில் விவசாயிகளுக்கு வழங்குவதற்காக மலை
வேம்பு, மகாகனி, தேக்கு, சந்தனம் உள்ளிட்ட மரக் கன்றுகள் தயார் நிலையில் உள்ளன.
பசுமை நிலப்பரப்பை அதிகரிக்கும் நோக் கத்திலும், விவசாயிகளுக்கு வருவாய் ஈட்ட உதவும் நோக் கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும். ஆதார், நிலத்திற்கான சிட்ட ஆகிய ஆவணங்களை விவசாயிகள் காண்பித்து கோவையில் உள்ள வன அலுவலக வளாகத்தில் மரக்கன்றுகளை இலவசமாக பெற்று செல்லலாம்.
விவசாயிகளுக்கு மட்டுமின்றி பள்ளி, கல்லூரி நிறுவனத்தினர், தொழில் நிறுவனத்தினர் தங்கள் வளாகங்களில் பசுமை நிலப்பரப்பை அதிகரிக்க பாதாம், புங்கம், நீர்மருது உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் மரக் கன்று வகைகள் மற்ற
துறையினருக்கு வழங்கப்
படாது. மேலும் விவரங் களுக்கு 86672 66884, 82482 39196. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.
வனத்துறை சார்பில் விவசாயிகள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனத்தினருக்கு பலவகை மரக்கன்றுகள் விலையில்லாமல் வழங்கப்படும் என அறிவிப்பு



Leave a Reply