பைக் டாக்ஸிக்கு தடை விதிக்க வேண்டும், கார் டாக்ஸி சேவைகளை முறைப்படுத்த வேண்டும், அரசு அனுமதியின்றி செயல்படும் டாக்ஸி செயலிகள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், நலவாரியங்களின் பணப் பயன்களை அதிகரிக்க வேண்டும், அரசு துறைகளில் ஒப்பந்த பணியாளர் முறையை கைவிட வேண்டும், ஆட்டோக்களுக்கான மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
உக்கடத்தில் நடைபெற்ற போராட்டத்துக்கு SDTU மாவட்டத் தலைவர் தாஜுதீன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் என்.எம். கமருதீன் வரவேற்றார். 50-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் பங்கேற்று, தங்களது கோரிக்கைகள் மற்றும் தொழில் ரீதியாக எதிர்கொள்ளும் பிரச்னைகளை எடுத்துரைத்தனர்.
SDTU மண்டலத் தலைவர் ஹபீப் ரஹ்மான், SDPI மாவட்டத் தலைவர் இஷாக், SDTU மாவட்ட துணைத் தலைவர் ரபீக், துணைச் செயலாளர் அப்துல் ரஹீம், பொருளாளர் மொய்தீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். SDTU மாநிலத் தலைவர் ஜே.எம். அசன் பாபு, SDPI மாவட்ட பொதுச் செயலாளர் சாகுல் ஹமீது, மாவட்ட துணைச் செயலாளர் சபீர் அஹமது உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.



Leave a Reply