தமிழ் திரையுலகின் ஒன்மேன் ஆர்மி மறைவு; பாக்கியராஜின் முந்தானை முடிச்சு படைத்த சாதனைகள்

Spread the love

தமிழ் திரையுலகம் மீண்டும் ஒரு ஆளுமையை இழந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு, இயக்குநர் பாரதிராஜா மறைய, அவரது முக்கியமான சிஷ்யர் இப்போது, நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். இயக்குநர் பாக்கியராஜின் திடீர் மறைவை தமிழ் திரையுலகம் எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்றுதான் தெரியவில்லை. கடந்த ஆண்டுதான் தமிழ் திரையுலகில் தனது பொன்விழா ஆண்டை நடிகர் பாக்கியராஜ் கொண்டாடினார். அத்தகைய பாக்யராஜ் இப்போது, உயிருடன் இல்லை என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மாரடைப்பு காரணமாக சென்னை கிரீம்ஸ் அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த 1953 ஆண்டு ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் பிறந்த பாக்யராஜ், இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரையுலக வாழ்க்கையை தொடங்கினார். அவ்வப்போது, சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். 1979ம் ஆண்டு ‘சுவர் இல்லாத சித்திரங்கள்’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து,  ‘அந்த 7 நாட்கள்’, ‘முந்தானை முடிச்சு’, ‘இன்று போய் நாளை வா’, ‘சின்ன வீடு’, ‘டார்லிங் டார்லிங் டார்லிங்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கி நடித்தார். உணர்வுப்பூர்வமான திரைக்கதைகளால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தார். இந்தியில் அமிதாப்பச்சனை வைத்து பாக்யராஜ் எடுத்த ‘ஆக்ரி ரஸ்தா ‘ பெரும் ஹிட்டானது.

பாக்யராஜ் படைத்த காவியங்களில் ஒன்றான ‘முந்தானை முடிச்சு’. இந்த படத்தின் வழியாக முருங்கைக்காய், பற்றி தமிழகத்தையே பேச வைத்தார். ஏவிஎம்நிறுவனத்தால் 30 லட்சம் ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட இப்படம், 4 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியது. தென்னிந்திய திரைப்பட வசூவிலில் இது, புதிய சாதனை ஆகும்.

சென்னை நகரில் மட்டும்  நான்கு திரையரங்குகள் மற்றும் தென்னிந்தியா முழுவதும் உள்ள 10 இடங்களில் 25 வாரங்கள் ஓடிய முதல் படம் இதுதான்.  திருவனந்தபுரத்தில் து ‘வெள்ளி விழா’வைக் கொண்டாடிய முதல் தமிழ்ப் படமும் இதுதான். இதன் இந்தி மறுதயாரிப்பு உரிமம் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டது. அந்த காலக்கட்டத்தில்  மறுதயாரிப்பு உரிமைக்காக வழங்கப்பட்ட மிக அதிகபட்சத் தொகை இதுவாகும். சுருக்கமாகச் சொன்னால், ‘முந்தானை முடிச்சு’ கலகலப்பான அமோகமான வெற்றிப் படமாகும்.இந்த படத்தில்தான் நடிகை ஊர்வசியும் அறிமுகமானார்.

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த படங்கள் விநியோகஸ்தர்களால் 40 லட்சம் ரூபாய்க்கு வாங்கப்படும் காலகட்டத்தில், பாக்யராஜ் தான் முதன்முறையாகத் தயாரித்த ‘தாவணி கனவுகள்’ என்ற படத்தின் திரைக்கதையையோ நடிகர்களையோ கூட முடிவு செய்யாத நிலையிலேயே, அந்த படத்தை  1.36 கோடிக்கு விற்று சாதனை படைத்தவர்.

சிவாஜி கணேசனைப் போன்றதொரு கம்பீரமான ஆளுமையோ அல்லது ரஜினிகாந்த்தைப் போன்றதொரு அதிரடி நடிப்போ பாக்யராஜிடம் இருக்கா.  5 அடி 5 அங்குல உயரமே கொண்ட அவர், சில சமயங்களில் தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளை நிமிர்ந்து பார்க்க வேண்டிய சூழலும் உண்டு. உண்மையில், திரையரங்குகளுக்கு வரும் லட்சக்கணக்கான ஆண்களைப் போலவே அவரும் ஒரு சராசரி தென்னிந்தியராக நடிப்பார். இயல்பான தென்னிந்தியப் பேச்சுவழக்கைக் கொண்டவர், தனது நகைச்சுவை உணர்வால் தொடர்ந்து ரசிகர்களைச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தவர்

திரைக்கதை எழுதுவது , நடிப்பு, இயக்கம், படத்தொகுப்பு, இசையமைப்பாளர்  என அனைத்தையும் செய்பவர் என்பதால், பாக்யராஜை ‘மனிதத் திரைப்படத் துறை’ என்று தாராளமாக அழைக்கலாம்.  பாக்யராஜ் இயக்கத்தில் நடித்து வெளியான இது நம்ம ஆளு படம் தமிழகத்தில் பட்டிதொட்டியெல்லாம் பேசப்பட்டது. இந்த படத்துக்காக பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்தாலும், அதை தாண்டி அந்த படம் பெற்ற வெற்றியை யாராலும் தடுக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *