கோவை இந்துஸ்தான் இன்ஜீனியரிங் கல்லூரி விடுதி சாப்பாட்டில் புழு… கொந்தளித்த மாணவிகள்

Spread the love

கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் இந்துஸ்தான் இன்ஜீனியரிங் கல்லூரி உள்ளது. பல நகரங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் இங்கு விடுதியில் தங்கி படிக்கின்றனர். விடுதி உணவு கட்டணம் என்ற பெயரில் ஏராளமான பணம் வசூலிக்கிறார்கள். ஆனால், மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.இது குறித்து, மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தொடர்ந்து, தரமற்ற உணவு வழங்கப்பட்டு வந்துள்ளது.


நேற்று வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட மாணவிகளுக்கு வாந்தி , பேதி ஏற்பட்டுள்ளது. கொதித்துப் போன மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகி சரஸ்வதி கண்ணையன், நேரில் வந்து மாணவிகளிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, ‘உங்களுக்கு ஏதாவது நடந்தால், நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு போவாம்’  என்று நிர்வாகம் தரப்பில் கூறியுள்ளனர். இதைக் கேட்ட  மாணவிகள், ‘அப்படியென்றால், நீங்கள் நல்ல தரமான சாப்பாட்டை கொடுக்க மாட்டீர்கள். மருத்துவமனைக்கு மட்டும் கூட்டிச் செல்வீர்களா? இப்படியும் எங்கிளிடத்தில் இருந்து பணத்தை வசூலீப்பீர்களா? என்று பதிலுக்கு கேள்வி எழுப்பினார்கள்.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை ஒருவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியுள்ளதாவது, ” பல ஆண்டுகளாக இங்கு வழங்கப்பட்ட உணவில் தரம் இல்லை.
எனது மகள் இங்குதான் படிக்கிறார். நிர்வாகத்திடம் தெரியபடுத்தியும் எந்த முன்னேற்றமும் இல்லை. சில மாதங்களுக்கு முன்பு, மாணவிகள் சிலருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. அப்போது, இந்த கல்லூரி நிர்வாகத்துக்குச் சொந்தமான இந்துஸ்தான் மருத்துவமனையில், வெளியே தெரியாமல் மாணவிகள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். நேற்றும் இதே போன்று, மாணவிகள் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், இந்த பிரச்னையை வெளியே சென்னால், உங்கள் படிப்பு பாழகி விடுமென்று மாணவிகளை பிரின்சிபல் மிரட்டுகிறார். இது தொடர்பாக, உணவுபாதுகாப்பு துறையில் புகார் அளித்துள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து விளக்கம் கேட்க, இந்துஸ்தான் இன்ஜீனியரிங் கல்லூரி செய்தி தொடர்பாளரை தொடர்பு கொண்ட போது, அவர் போனை எடுக்கவில்லை.