கே.எம்.சி.எச். மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சைக்கான சிறப்பு முகாம்

kmch
Spread the love

கோவை கே.எம்.சி.எச். மருத்துவமனை சார்பில் சிறுநீரகம், புரோஸ்டேட், சிறுநீர்ப்பை தொடர்பான நோய்கள் மற்றும் சிறுநீரகப் புற்றுநோய்க்கான சிறப்பு அறுவை சிகிச்சை முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம் ஜூலை 31, 2026 வரை நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் அரசு விடுமுறை நாட்கள் தவிர, தினமும் காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை முகாம் செயல்படும். இதில் பங்கேற்கும் நோயாளிகளுக்கு அனுபவம் வாய்ந்த சிறுநீரக மருத்துவ நிபுணர்களின் இலவச ஆலோசனை வழங்கப்படுகிறது.
மேலும், நோயாளிகளின் உடல்நிலைக்கு ஏற்ப பரிந்துரைக்கப்படும் ரோபோடிக் அறுவை சிகிச்சை, தழும்புகள் இல்லாத லேசர் சிகிச்சை மற்றும் எம்போலைசேஷன் உள்ளிட்ட நவீன சிகிச்சைகள் சிறப்பு சலுகைக் கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகின்றன.
இது குறித்து கே.எம்.சி.எச். மருத்துவமனையின் சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் குப்புராஜன் கூறுகையில், “ரோபோடிக் அறுவை சிகிச்சை என்பது ரோபோ தானாகச் செய்யும் சிகிச்சை அல்ல. அனுபவம் வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர், ரோபோடிக் தொழில்நுட்பத்தின் உதவியுடன் மிகத் துல்லியமாக அறுவை சிகிச்சையை மேற்கொள்கிறார். வாகனங்களில் உள்ள பாதுகாப்பு அம்சங்களைப் போல, இந்தத் தொழில்நுட்பமும் மருத்துவரின் திறனை மேம்படுத்தும் உதவிக் கருவியாக மட்டுமே செயல்படுகிறது. அறுவை சிகிச்சை முழுவதும் மருத்துவரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்,” என்றார்.
மேலும், இந்த முறையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுவதால் வலி குறைவாக இருப்பதுடன், ரத்த இழப்பும் குறையும். நோயாளிகள் விரைவாக குணமடைந்து குறுகிய காலத்திலேயே இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
புரோஸ்டேட் புற்றுநோய்க்கான அறுவை சிகிச்சைகளில் உலகளவில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக ரோபோடிக் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக சிறுநீரகத்தை பாதுகாக்க வேண்டிய சிக்கலான அறுவை சிகிச்சைகள், கட்டிகளை துல்லியமாக அகற்றுதல் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சைகளுக்கு இந்த நவீன முறை பெரிதும் பயனளிக்கிறது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
முகாம் தொடர்பான கூடுதல் தகவல்கள் மற்றும் முன்பதிவிற்கு 74188 87411 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.